search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி வீட்டில் நகை கொள்ளை"

    புதுவையில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை ரெயின்போ நகர் ராஜராஜேஸ்வரி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். (வயது 70). வியாபாரி. இவரது மனைவி மகாலட்சுமி (59). இவர்களுடைய மகன் விஜயகுமார் (43). இவர் கோட்டகுப்பத்தில் வசித்து வருகிறார்.

    இதனால் ரெயின்போ நகரில் ஆறுமுகம், மகாலட்சுமி மட்டும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    நேற்று மகாலட்சுமி மட்டும் வீட்டில் இருந்தார். வீட்டுக்கு பிரான்சில் இருந்து உறவினர்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று மாலை கடற்கரைக்கு சென்று விட்டு இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்து தனியாக தூங்கினர்.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ பின்பக்க வாசல் வழியாக வந்து 3 கதவுகளை உடைத்து வீட்டில் இருந்த 6 பீரோவில் 5 பீரோவை உடைத்தனர்.

    அதில், ஒரு பீரோவில் இருந்த 15 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் மகாலட்சுமியின் கைப்பை யிலும் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    காலையில் எழுந்து பார்த்த போது, மகாலட்சுமி வீட்டில் கதவு, பீரோ உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த நகை- பணத்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கோட்டக்குப்பத்தில் உள்ள தனது மகன் விஜயகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுகுறித்து பெரியகடை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    காட்பாடியில் வியாபாரி வீட்டில் புகுந்து 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வேலூர்:

    காட்பாடி சோலைநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 60). காட்பாடி போலீஸ் நிலையம் எதிரே எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். உறவினர் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூர் சென்றார்.

    இதனை பயன்படுத்தி கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு முன்பக்க கதவை பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், கம்மல்கள் உள்ளிட்ட 10½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    காட்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காட்பாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் எண்ணை தடவி கொண்டு வீடுபுகுந்து கொள்ளையடிக்க முயன்ற நெல்லை வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காட்பாடி பகுதியில் வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர்.

    கொள்ளை சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசார் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஆம்பூர் அருகே வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கூட்ரோடு, ஈத்கா மைதானம் பகுதியை சேர்ந்த சமிஉல்லா மகன் அஸ்லாம் பாஷா (வயது 30). இவர் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அஸ்லாம் பாஷா குடும்பத்தினரோடு பெங்களூருவிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றார். வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 23 பவுன் நகை, மற்றும் ரூ.85 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று விட்டனர்.

    வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அஸ்லாம்பாஷாவிற்கு தகவல் கொடுத்தனர்.

    அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இது குறித்து அஸ்லாம்பாஷா உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் கொள்ளையர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ×